Kavita paudwal biography of williams
கவிதா பட்வால்
கவிதா பட்வால் துல்புலே (Kavita Paudwal - பிறப்பு 1974), ஓர் இந்தியப் பாடகி ஆவார். பஜன் எனப்படும் பக்தி பாடல்கள்பாடுவதில் பெயர் பெற்ற இவர், காயத்ரி மந்திரம், கிருஷ்ணர், லக்ஷ்மி மற்றும் அம்ருத்வனி உட்பட சுமார் 40 இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இவர், 1995ஆம் ஆண்டு முதல் பக்திப் பாடல்களைப் பாடி வருகிறார். ஹையா (1995), மிர்ச் மசாலா (1996), மற்றும் ஜூலி ஐ லவ் யூ போன்ற பிரபலமான பாடல்களுக்கு இவர் குரல் கொடுத்துள்ளார். மேலும், இவர், பல பாலிவுட் படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். அவற்றில், தோஃபா (1984), ஜூனூன் (1992), பூல் பேன் பத்தர் (1998), பாவனா (1984), மற்றும் அங்கரே (1998) ஆகிய திரைப்படங்கள் அடங்கும்.[1][2]
இவர் முக்கியமாக இந்தி மொழித் திரைப்படங்கள் மற்றும் இசை ஆல்பங்களில் பாடுகிறார். தமிழ், தெலுங்கு, பெங்காலி, கன்னடம், மராத்தி, குசராத்தி, நேபாளி, மலையாளம், ஒரியா, போஜ்புரி மற்றும் பிற இந்திய மொழிகளிலும் பாடியுள்ளார்.[3]
இளமையும் கல்வியும்
[தொகு]கவிதா பட்வால் மும்பையில் உள்ள நர்சி மோஞ்சி வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் வணிகப் பட்டம் பெற்றவர்.[4]நியூயார்க் பல்கலைக்கழகத்தின் டிஷ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் ஊடாடும் ஊடகத்தில் முதுகலைப் பட்டத்தை முடித்தார்.[5] அவர் இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பண்டிதரான ஜியால் வசந்த் மற்றும் சுரேஷ் வாட்கர் ஆகியோரிடமும், இவரது பெற்றோர் அருண் பட்வால் மற்றும் அனுராதா பட்வால் ஆகியோரிடமும் பயிற்சி பெற்றார்.[3]
தொழில்
[தொகு]கவிதா பட்வால், தனது 13ஆம் வயதில், மகேஷ் பட்டின்ஜூனூன் திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இவருக்கு 16 வயதாகும் போது, இரண்டு படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், லக்ஷ்மிகாந்த்-பியாரேலால், அனு மாலிக், பப்பி லஹிரி போன்ற பல்வேறு திரைப்பட இசையமைப்பாளர்களுக்கு கவிதா குரல் கொடுத்துள்ளார். கஜோல், ஐஸ்வர்யா ராய் பச்சன், சோனாலி பிந்த்ரே, பூஜா பட் போன்ற நடிகைகளுக்கு பின்னணி பாடியுள்ளார் . டி-சீரிஸ் உடன் 40 பக்தி இசை குறுந்தகடுகளை இவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் ஹரிஹரன், சோனு நிகம், ஜாவேத் அலி மற்றும் ஷான் போன்ற சக பாடகர்களுடன் பாடியுள்ளார்.
பட்வால், தோஃபா (1984), பாவனா (1984), அம்சியசர்கே ஆமிச் (1990), ஜம்லா ஹோ ஜம்லா (1995), பூல் பேன் பத்தர் (1998), ரட்சகன் (1997), மின்சார கனவு (1997) கிராந்திகாரி (1997), அங்கரே (1998), லவ் யூ ஹமேஷா (2001) மற்றும் ஹீரோயின் நம்பர் 1 (2001) போன்ற திரைப்படங்களுக்குப் பின்னணிப் பாடலைப் பாடியுள்ளார்.
நவம்பர் 2019-இல், அவர் பங்கஜ் உதாஸுடன் இணைந்து ரங்க தனுச்சா ஜூலா என்ற மராத்தி பவ்கீத் தனிப்பாடலுக்காகப் பணியாற்றினார்.[6]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் அனுராதா பாட்வால் மற்றும் அருண் பட்வால் ஆகியோரின் மகள் ஆவார்.[7]